கல்முனை மாநகரசபையில் முக்கிய விடயம் ஆராயப்பட்டு இருக்கும் போது பெண் உறுப்பினர்கள் முகநூல் பயனாளிகளாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு நேற்று வியாழக்கிழமை (28) மாலை கல்முனை நகர மண்டபத்தில் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கூட்டறிக்கை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற வண்ணம் இருந்தன. இந்நிலையில் சபையில் இருந்த பெண் உறுப்பினர்கள் முகநூல் பயனாளிகளாக மாறி சக உறுப்பினர்களுடன் அளவளாடிக் கொண்டிருந்தனர்.