கிழக்கு மாகாணத்தில் தனியாக சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கதி – சிக்கிய இளைஞனை செருப்பால் துவைத்த பெண் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 15, 2019

கிழக்கு மாகாணத்தில் தனியாக சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கதி – சிக்கிய இளைஞனை செருப்பால் துவைத்த பெண்

வீதியால் செல்லும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட தர்ம அடியாக இந்தக் காணொளி அமைந்திருக்கிறது.

வீதியால் சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு குறித்த பெண் தன்னுடைய செருப்பினால் அடித்தது மட்டுமல்லாது அவரை தன்னுடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவும் செய்திருக்கிறார்.

இதுகுறித்த சம்பவம் கிழக்கு மாகாணத்தின் தமிழ் பகுதி ஒன்றில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பெண்கள் பலவீனமானவர்கள். அவர்களிடம் தங்களின் குரூரப்புத்தியினை காட்டிவிட்டு தப்பித்துச் சென்றுவிடலாம் என்று எண்ணும் இளைஞர்களுக்கு இந்த காணொளி சிறந்த பாடமாக அமைந்திருக்கிறது.

மன்னிப்புக்கேட்கும் வரை வெளுத்துவாங்கியிருக்கும் குறித்த யுவதியின் தைரியத்தை பெரிதும் இணையவாசிகள் பாராட்டியுள்ளார்கள். தவறாக நடந்துகொள்பவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்லாது அவர்களிடம் நேராக தவறை தட்டிக் கேட்கும் மனத்தைரியம் பெண்களுக்கு வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் இந்தக் காணொளி பகிரப்பட்டுவருகின்றன.