கோவை சிங்காநல்லூரை சேர்ந்த நாகநாதன் என்பவரின் மகள் ராஜேஸ்வரி நீலாம்பூர் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர், கடந்த 11-ம் தேதி விமான நிலையத்தில் இருந்து நீலாம்பூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது, கோல்டுவின்ஸ் அருகே விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்திற்கு சாலையின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் தான் காரணம் என்று கூரப்பட்டது. இந்த் விபத்தால் ராஜேஸ்வரியின் கால்கள் நசுங்கின.இதனையடுத்து படுகாயமடைந்த ராஜேஸ்வரி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அதிமுக கொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த
ராஜேஸ்வரியின் இடதுகால் இன்று அகற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த விபத்தில் ராஜேஸ்வரியின் இடது கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இடதுகாலில் ரத்த நாளம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் ராஜேஸ்வரியின் இடதுகாலை மருத்துவர்கள் இன்று அகற்றியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன்.
ஏற்கனவே அதிமுக பேனரால் சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணின் உயிரே பலியான நிலையில் தற்போது அதிமுக கொடிக்கம்பம் ஒன்றினால் ஒரு இளம்பெண்ணின் கால் அகற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேலாவது சாலையில் பேனர், கொடிக்கம்பம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.