மின்சாரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடாத்திய ஏழுபேர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, November 6, 2019

மின்சாரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடாத்திய ஏழுபேர் கைது!

மின்சாரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடாத்திய ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா ஆச்சிபுரம் பகுதிக்கு நேற்று முந்தினம் தமது வழமையான மின்சார தொழிலினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் சென்ற ஊழியர்கள் மீது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக ஆறுபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக வீடியோ காணொளியின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்ட பொலிசார் இன்று அதிகாலை ஏழுபேரை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.