இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளின் தலைவர்களுடன் அதிகாரிகள் எவரும் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவரது உதவியாளர் ஒருவர் மாத்திரம் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
இதுகுறித்து தமது கீச்சகப் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச,
எங்கள் நாடுகளின் இதயங்களுக்கு முக்கியமான மற்றும் நெருக்கமான பல முக்கிய அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
சிறிலங்கா, இந்தியா இடையே, பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் ஒரு வலுவான உறவை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.