வடக்கிற்கான புகையிரத சேவையினை முடக்க சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதாவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மல்லாகத்திற்கும் கட்டுவனுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள புகையிரத பாதையில் உள்ள வளைவொன்றில் தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு கிளிப்புகளை இனம் தெரியாத நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர். அவர்களால் சுமார் இருபதற்கும் மேற்பட்ட சிலிப்பர் கட்டைகளின் கிளிப்புகள் அகற்றப்பட்டிருந்தது. இந்த சம்பவம் புகையிரதத்தை கவிழ்ப்பதற்கான முயற்சியான எனும் கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனரென உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கமுவ பகுதியில் புகையிரதம் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளாகியிருந்தது.இதனால் சில தினங்கள் புகையிர போக்குவரத்து சேவை முடங்கியிருந்தது.
இச்சதி பின்னணியில் தனியார் கொழும்பு பேரூந்து சேவையினை சேர்ந்த தரப்புக்களோ அல்லது வேறு பின்னணிகளோ இருக்கலாமென விசாரணை தொடர்கின்றது.