கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) கிரேன் மூலம் ஒரு கொள்கலனில் இருந்து பொருட்களை ஏற்றும்போது அதன் சங்கிலி உடைந்து தொழிலார் மீது வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர் உடனடியாக கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.