பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படும் – ஞானசாரர் அதிரடி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 19, 2019

பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படும் – ஞானசாரர் அதிரடி

அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை அடுத்து பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்பது ஒரு கட்டுக்கதை என தெரிவித்தார்.

அத்தோடு நாட்டிற்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் இந்த இயக்கத்தின் தேவை இருக்காது என ஞானசார தேரர் கூறியுள்ளார்.