கோரத்தோட்ட பகுதியில் 22 வயது யுவதியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 29, 2019

கோரத்தோட்ட பகுதியில் 22 வயது யுவதியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தர்!

கடுவெல, கோரத்தோட்ட பகுதியில் இளம் யுவதியொருவரினதும், குடும்பஸ்தர் ஒருவரினதும் சடலங்கள், வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (28) உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு கொலை இடம்பெற்றிருக்கலாமென கருதப்படுகின்றது.யுவதியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட பின்னர், குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென நவகமுவ பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

22 வயதான யுவதியும், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஒருவரின் சடலமுமே மீட்கப்பட்டுள்ளன. குறித்த யுவதி சில மாதங்களின் முன்னரே வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளார். தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் ஆணே, சடலமாக மீட்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்கொலைக்கு முன்னதாக 35 வயது ஆண் கடிதமொன்றையும் எழுதி வைத்துள்ளார்.