ஜனாதிபதியின் உத்தரவு – யாழை சுத்தப்படுத்தும் பொலிஸார் - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, November 26, 2019

ஜனாதிபதியின் உத்தரவு – யாழை சுத்தப்படுத்தும் பொலிஸார்

யாழ்ப்பாணம் மாநகரை சுத்தப்படும் சிறப்பு செயற்திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அதற்கமைய யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் முன்றலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணி முதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும் பணியில் பொலிஸ் திணைக்களம் ஈடுபட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்த செயற்திட்டத்தை யாழ்ப்பாணம் மாநகரில் முன்னெடுத்தனர். அதில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட் உள்ளிட்ட உறுப்பினர்களும் இணைந்துகொண்டனர்.

அதேவேளை குறித்த செயற்திட்டம் முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து முன்னெடுக்கப்பட்டமையால், தபாலக சந்தி முதல் தந்தை செல்வா சதுக்கம் வரையிலான காங்கேசன்துறை வீதி காலை 7 மணி முதல் 8.30 மணி வரையில் மூடப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபா்,“யாழ்.மாநகரை துாய்மையாக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். டெங்கு நுளம்புகள் பெருகாத வண்ணம் எமது சுற்றாடலை பாதுகாக்கவேண்டும்.

நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக சுற்றாடலை வைத்திருப்போா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என மேலும் கூறியுள்ளாா்.