கோட்டாவை தொலைபேசியில் வாழ்த்திய சம்பந்தன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, November 18, 2019

கோட்டாவை தொலைபேசியில் வாழ்த்திய சம்பந்தன்!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த கோட்டாபய ராஜபக்சவிற்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.


ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியீட்டி, நாட்டின் 7வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய நேற்று அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் அவரை வாழ்த்தி வருகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் நேற்று மாலை கோட்டாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சம்பிரதாயமாக நடந்த இந்த பேச்சின்போது, நாளை (இன்று) பதவியேற்கிறேன் என கோட்டாபய தெரிவித்திருந்தார். எனினும், இரா.சம்பந்தன் நிகழ்விற்கு வர வேண்டுமென கோட்டாபய அழைக்கவில்லை.

அதேவேளை, பெரமுன தரப்பினர் நேற்று சிறுபான்மையின கட்சிகள் பதவியேற்பில் கலந்து கொள்ள வேண்டுமென விரும்பி விசேட அழைப்பு விடுத்திருந்தனர். எனினும், இரா.சம்பந்தனுடனான பேச்சின்போது, பதவியேற்பிற்கான அழைப்பை கோட்டாபய விடுக்கவில்லை.