முஸ்லிம் சமூகம் தொடர்பாக விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக பொலிஸ் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் வெளியிட்ட கருத்தில் முஸ்லிம் சமூகம் தொடர்பாக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். முஸ்லிம் அரசியல் தலைவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து உரையாற்றியிருந்தார். இது தொடர்பாக, வீடியோ ஆதாரங்களுடன் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வீடியோவையும், முறைப்பாட்டையும் சி.ஐ.டிக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.