கொழும்பு ரோயல் கல்லூரியில் தேர்தல் கடமையில் இருந்த 50 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு ஒவ்வாமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.