மாவீரர் நாள்தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, November 27, 2019

மாவீரர் நாள்தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் போரின் போது இறந்த விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என, ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகத்திடம் கூறியதாக வந்த செய்தியை ஜனாதிபதி கோட்டாபய மறுத்துள்ளார்.

அத்துடன் அது ஒரு பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் அவ்வாறான எந்த ஒரு கருத்தையும் நான் எந்த ஒரு ஊடகத்திடமும் தெரிவித்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டினதும், நாட்டின் அனைத்து குடிமக்களதும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற ஒரு தீர்க்கமான தேர்தலுக்கு முன்னதாக , தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதித்து, அவர்களைத் தவறாக வழிநடத்துவதற்காக குறித்த பத்திரிகை, பொய்யான செய்தியை வேண்டுமென்றே விஷமத்தனமாக வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பாதுகாப்பிற்கு பங்கமில்லாது புலிகளை நினைவுகூறுவதில் எந்த தவறுமில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய , பிரத்தியேக பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது