8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - 5பேர் பலி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 27, 2019

8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - 5பேர் பலி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 573 குடும்­பங்­களைச் சேர்ந்த 2272 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.  பல இடங்கள் வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி முதல் நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையால் 7 மாவட்டங்களில் 573 குடும்­பங்­களைச் சேர்ந்த 2272 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, ஐவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

அத்­தோடு கடும் காற்று மற்றும் வெள்ளம் என்­ப­வற்­றால், ஒரு குடி­யி­ருப்பு முழுமையாகவும் 38 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் கட்­டடங்கள் மூன்று பகு­தி­ய­ள­வி­லும்­ சே­த­ம­டைந்­துள்­ளன.

மேலும் அனர்த்­தங்­களால் பாதிக்­கப்­பட்ட 61 குடும்­பங்­களைச் சேர்ந்த 203 பேர் தற்­கா­லிக முகாம் களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதேவேளை, அதிக மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும் என 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார், திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்­பாறை ஆகிய மாவட்டங்களுக்கே 150 மில்லி மீற்­றரைவிட அதிக மழை வீழ்ச்சி பதி­வாகக்கூடும் எனத் தெரி­வித்து சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.