நியூசிலாந்து மண்ணில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 27, 2019

நியூசிலாந்து மண்ணில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019!மாவீரர் நாள்! தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் விதையாகி போன தியாக வீரமறவர்களை வணங்கிடும் புனித நாள். இப்புனித நாளில் தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகி போன வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் கார்த்திகை 27 ஆம் நாள் Mt Roskill war memorial மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.
மாலை 6.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர் திரு. சுந்தரராஜன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் தேசிய கொடியினை வழக்கறிஞர் திரு பிரேம் குமார் அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர்  திரு ரொபின் ஏற்றிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 2008 ம் ஆண்டின் மாவீரர்நாள் உரையிலிருந்து சிறு பகுதி ஒலிபரப்பப்பட்ட்து.
பின்னர்  மணியோசை  ஒலிக்க விடப்பட்டது இதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. பின்னர் ஈகைச்சுடரினை லெப்டினன் கேணல் இலக்கியாவின் தாயார் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழீழத்திற்காக தமது இன்னுயிர்களை தியாகம் தந்த சீலர்களின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் நினைவுத்தூபிகளுக்கும், திருவுருவபடங்களிற்கும் பூக்களால் மரியாதை செய்து மாவீரர்களின் எண்ணங்களை ஈடேற்ற சுடர் ஏற்றி மக்கள் சத்தியம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில், 350 ற்கு மேற்பட்ட தமிழ் உறவுகள் கலந்து கொண்டு தங்கள் வீர வணக்கத்தை நம் தேச புதல்வர்களுக்கு காணிக்கையாக்கினர் .
தொடர்ந்து திரு மேர்வின் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. சில மாவீரர்களின் சில வரலாற்று நிகழ்வுகளையும் வீழ்ந்தே கிடக்காதீர் என்ற எண்ணத்தையும் உள்ளடக்கியதாய் இவரின் உரை சிறப்பாய்  இருந்தது.  தொடர்ந்து திரு சுரேந்திரன் அவர்ளின் கவிதை இடம்பெற்றது. தொடர்ந்து செல்வன் குருபரன் சிவராம் அவர்களின் கவிதை இடம்பெற்றது.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து திரு வேல் முருகன் அவர்களின் உரை இடம்பெற்றது தொடர்ந்து செல்வன் தருண் அவர்களின் கவிதை இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து திரு தீபன் அவர்கள் சார்பாக தாயக பாடல் இசைக்கப்பட்டது. தொடர்ந்து செல்வி  லிஷானா ராபின் அவர்களின் நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து வித்துவான் திவாகர் அவர்களின் மாணவர்கள் தாயகப்பாடல்ளை வீணை கீபோர்ட் மூலம் இசைத்து காட்டினர்.
தொடர்ந்து திருமதி கஜா , திருமதி ரூபிக்க அவர்கள்சார்பாக தாயக பாடல் இசைக்கப்பட்ட்து. இதனைத்தொடர்ந்து செல்வி கிருத்திகா, செல்வி சாருஜா அவர்களின் நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து திரு தீபன் அவர்களால் தாயக பாடல் இசைக்கப்பட்டது.
இறுதி நிகழ்வாக கொடியிறக்க நிகழ்வு இடம்பெற்றது நியூசிலாந்து கொடியினை திரு ஆறுமுகம் ரத்தினவேல் தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாடடாளர் வேந்தன் அவர்கள் கொடியினை இறக்கினர்  முடிவில், சகல விதங்களிலும் நிகழ்வுகளிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு இத் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல. மாறாக ஈழத்தமிழர்களாகிய நாம் உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும் தமிழீழம் எமது இலட்சியம். இந்த இலட்சியத்துக்காக எத்தகைய இடர்கள், சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசான எமது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்போமென என இப்புனிதநாளில் உறுதியெடுப்போம் என நமக்குள் நாமே உறுதி பூணுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் ஒலித்து நிறைவடைய, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 9.30 மணியளவில் நிறைவு பெற்றன.