ராகு காலத்தில் சுப நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன் தெரியுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, October 27, 2019

ராகு காலத்தில் சுப நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன் தெரியுமா?

ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என நமது பெரியோர்கள் கூறுவதுண்டு.புராணங்களின் படி ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன.

அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் 'ராகு காலம்' என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் 'எமகண்டம்' என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும் என கருதப்படுகின்றது.

அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிப்பட்டால் சிறப்பு பலன்களை தருகிறது எனப்படுகின்றது.

அதிலும் செவ்வாய் கிழைமை ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது.

மேலும் செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையை வழிபடுவது நற் பலன்களை தருகின்றது