வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் மங்களகரமான விகாரி வருடம் 29.10.2019, ஐப்பசி மாதம் 12-ம் நாள், சித்த யோகம், விசாக நட்சத்திரத்தில், அதிகாலை 3.49-க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2019 நவம்பர் மாதம் 5-ம் தேதி காலை 9.30-க்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார்.
மேலும், விகாரி வருடம் பங்குனி 15-ம் தேதி 28.3.2020 சனிக்கிழமை அன்றைய தினம் குருபகவானின் அதிசாரம் தொடங்குகிறது. கிட்டதட்ட 90 நாட்கள் அதிசாரத்தில் இருப்பார்.
தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.
தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் அடுத்த விகாரி வருடம் அக்டோபர் மாதம் மகர ராசிக்கு மாறுகிறார்.
தனுசு ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும், ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும், ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார்.
குருபகவான் கடக ராசியில் உச்சமடைந்தும், மகர ராசியில் நீசமடைகிறார்.
கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பிறகு குருபகவான் தனுசு ராசிக்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.