‘குண்டுத் தாக்குதலுக்கு கோட்டாபய பொறுப்பு கூற வேண்டும்’- கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 10, 2019

‘குண்டுத் தாக்குதலுக்கு கோட்டாபய பொறுப்பு கூற வேண்டும்’- கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டுமென கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு கோட்டாபயதான் காரணமென கூறும் வகையில் பதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதில் குறைந்தளவான மக்களே பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.