கொத்மலை நீர்த்தேக்கத்தில் யுவதியின் சடலம் மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 29, 2019

கொத்மலை நீர்த்தேக்கத்தில் யுவதியின் சடலம் மீட்பு!

பூண்டுலோயா -கொத்மலை நீர்த்தேக்கத்தில் நேற்று மதியம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக   பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே குறித்த சடலம் பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம்  விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா – ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதி  27.11.2019  புதன்கிழமை அன்று காலை காணாமல் போய் இருந்த நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர்த் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.