ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்நோக்கி வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.