தமிழர்கள் துவேசிகள் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 22, 2019

தமிழர்கள் துவேசிகள் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம்



தமிழர்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “இந்த நாட்டிலே இரண்டு சமூகங்கள் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டவைகளாக இருக்கின்றன.

பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவருக்கு எமது தேசிய இனம் வாக்களித்தது. அதேநேரத்தில் மற்றொரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சிங்கள தேசம் வாக்களித்தது.

எங்களுடைய தேசத்திலே நடைபெற்ற அத்தனை பிரச்சினைகளையும் மறக்கமுடியாத வடுக்களாக இன்றும் சுமந்துகொண்டிருப்பதை இந்த தேர்தலில் உறுதி செய்துள்ளோம். - என்றார்.