குபேர விளக்கை இப்படி ஏற்றினால் அதிர்ஷ்டம் பெருகுமாம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, October 28, 2019

குபேர விளக்கை இப்படி ஏற்றினால் அதிர்ஷ்டம் பெருகுமாம்!

குபேரர் செல்வச் செழிப்பை நமக்கு அள்ளித் தருபவராக இருக்கின்றார். அந்த குபேரனை வழிபட நாம் ஏற்றும் தீபம் தான் குபேர விளக்கு ஆகும்.

அந்தவகையில் குபோர விளக்கை எப்படி ஏற்றுவது, இதனை ஏற்ற உகந்த நேரம் என்னென்ன என்பதை பார்ப்போம்.
எப்படி ஏற்ற வேண்டும்?
  • நம் வீட்டில் காலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு இருந்தாலும், மாலையில் ஒரு முறை வாசலை சுத்தம் செய்து, அரிசி மாவு கோலம் போட்டு, காவி நிறத்தில் வர்ணம் தீட்ட வேண்டும்.
  • அடுத்ததாக நம் நிலவாசல்படியை துடைத்து இரண்டு பக்கமும், உங்கள் வீட்டு வழக்கப்படி மஞ்சள் தீட்டி குங்கும பொட்டு வைக்க வேண்டும்.
  • அடுத்ததாக ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு பாதியில் மஞ்சளும் மற்றொரு பாதையில் குங்குமம் தடவி வாசல் படியின் இரண்டு பக்கத்திலும் வைக்க வேண்டும். எலுமிச்சை துண்டுகள் பக்கத்தில் பூக்களையும் வைத்து விடுங்கள்.
  • விளக்கினை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக விளக்கிற்கு 3 அல்லது 5 என்ற கணக்கில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும்.
  • நல்லெண்ணெயையும், திரியையும் சேர்த்து தயார் செய்த விளக்கினை, நாம் நிலவாசல்படியின் வெளிப்பக்கமாக சென்று, வெளியிலிருந்து உள்ளே பார்த்தவாறு நின்று கொண்டு, ஒரு மரப்பலகையின் மீது விளக்கினை வைத்து, வாசலில் இடது பக்கத்தில் ஏற்ற வேண்டும்.
யார் ஏற்ற வேண்டும்?
விளக்கு கிழக்கு நோக்கித் தான் இருக்க வேண்டும். நம் வீட்டில் உள்ள மூத்த பெண்களின் கையால் இந்த விளக்கினை ஏற்றுவது இன்னும் சிறப்பானது ஆகும்.
இந்த விளக்கினை ஏற்றும் பொழுது அனைவருக்கும் மன நிம்மதியும், செல்வச்செழிப்பும் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.
உகந்த நேரம்
  • குபேரருக்கு உகந்த நேரமான மாலை 5.30 லிருந்து 8 மணி வரை இந்த விளக்கினை ஏற்றி வைக்கலாம்.
  • இந்த குபேர விளக்கினை நாம் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு மேல் ஏற்ற வேண்டும்.
  • நில வாசப்படியில் உள்ள விளக்கினை பூர்த்தி செய்யும் முன்பு, அந்த விளக்கினை எடுத்துக் கொண்டு வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து அரை மணி நேரம் எரிய விட்டு பின்பு பூர்த்தி செய்வது நல்லது.

இந்த விளக்கினை நாம் ஏற்றுவதன் மூலம் குபேரரின் அருளை முழுமையாகப் பெறமுடியும்.