சம்பந்தன் புத்தத்திற்கு முதலிடம் கொடுத்த போது எங்கே போனீர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, October 28, 2019

சம்பந்தன் புத்தத்திற்கு முதலிடம் கொடுத்த போது எங்கே போனீர்கள்!காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 981 நாட்களாக போராடிவரும் காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே இந்த ஆர்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பல நாட்களாக தாங்கள் வீதிகளில் போராடிவருவதாக தெரிவித்தனர்.

தமக்கான நீதியை வழங்குவதற்கு யாரும் முன்வராத நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதனை பெற்றுக்கொள்ளலாம் என்று பேரம் பேசும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘தெருவிலே தமிழர்கள். சிங்கள வேட்பாளர்களிற்கு வாக்களிக்க கோரி தேர்தல் திருவிழாவில் நீங்கள்?’, ‘தமிழ் சிவில் அமைப்பு உடந்தையா?’, ‘புத்தத்திற்கு சம்பந்தன் முதலிடம் கொடுத்தபோது தமிழ் புத்திஜீவிகள் எங்கு போனீர்கள்?’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டினது கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.