மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய மாவீரர் தினம் இன்று (27) கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.