புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேரை கொண்டது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.