பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை கடற்கரை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஒன்று கூடிய சுமார் 100 இளைஞர்கள், யுவதிகள் போதைப்பொருளை பாவித்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அங்கு சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டதில், போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இதையடுத்து இளைஞர், யுவதிகள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.