திருடிய நகைகள் தங்கக் கட்டியாக மீட்பு; கொடூரத் திருடர்கள் கைது. - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 8, 2019

திருடிய நகைகள் தங்கக் கட்டியாக மீட்பு; கொடூரத் திருடர்கள் கைது.


மட்­டக்­க­ளப்­பு-­ கல்­ல­டியில் வீட்டை உடைத்து திரு­டப்­பட்ட தங்க நகைகள் உருக்­கப்­பட்ட நிலையில் யாழ்ப்­பாணம் சாவ­கச்­சேரி நகைக்­கடை ஒன்­றி­லி­ருந்து பொலி­ஸாரால் நேற்றுக் காலை கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­து என்று காத்­தான்­குடி பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி கஸ்­தூரி ஆராச்சி தெரி­வித்தார்.

கடந்த 29.8.2019 அன்று கல்­லடி கடற்­கரை வீதி­யி­லுள்ள வீடு ஒன்றை உடைத்து 2 மாலைகள், 2 வளை­யல்கள், ஒரு தங்கச் சங்­கிலி மற்றும் மோதி­ரங்கள் திரு­டப்­பட்­டி­ருந்­தன.

இது குறித்து பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்த கல்­ல­டியைச் சேர்ந்த ஒருவர் விசா­ர­ணை­க­ளின்­போது வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டையில் இந்தச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய களு­வாஞ்­சிக்­குடி மற்றும் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த இருவர் குறித்த தக­வல்கள் வெளி­வந்­தன.

இந்த நிலையில் முத­லா­வது சந்­தேக நபரைக் கைது செய்து தொடர் விசா­ர­ணை­களை நடத்­திய குற்­றத்­த­டுப்பு பொலிஸ் பொறுப்­ப­தி­காரி முஸ்­தபா தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் யாழ்ப்­பாணம் சென்று பிர­தான சந்­தேக நபரைக் கைது செய்­தனர்.

இத­னை­ய­டுத்து சாவ­கச்­சே­ரி­யி­லுள்ள நகைக் கடை­களில் ஒன்றில் குறித்த நகைகள் உருக்­கிய தங்கக் கட்­டி­யாக விற்­பனை செய்­யப்பட்டி­ருந்த நிலையில் கைப்­பற்றப்­பட்­டன. இத­னை­ய­டுத்து திரு­டப்­பட்ட நகை­களைக் கொள்­வ­னவு செய்த உரி­மை­யா­ளரும் களு­வாஞ்­சிக்­கு­டியில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

பிர­தான சந்­தேக நபர் ஏறாவூர் சவுக்­க­டியில் உள்ள வீடு ஒன்றை உடைத்துக் கொள்­ளை­ய­டித்­த­துடன் அந்த வீட்­டி­லி­ருந்த பெண்­ணையும் அவ­ரது மக­ளையும் கொலை செய்­தவர் எனவும் இரண்­டா­வது சந்­தேக நபர் வெல்­லா­வெ­ளியில் அவ­ரது மனை­வி­யையும் பிள்­ளை­யையும் அவ­ரது மாமி­யா­ரையும் கொலை செய்­தவர் எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர். மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்­றத்தில் சந்­தேக நபர்கள் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.