தொடங்கியது கோட்டாவின் தொண்டரடிப்பொடிகளது ஆட்டம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 8, 2019

தொடங்கியது கோட்டாவின் தொண்டரடிப்பொடிகளது ஆட்டம்?

கோட்டபாய ஜனாதிபதி கதிரை ஏறமுன்னரே அவரது எடுபிடிகள் தங்கள் ஆட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்.

நேற்று இரவு கோட்டாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டிவந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தனது வீட்டுச் சுவரிலும் ஒட்ட முற்பட்ட போது தான் அதனை எதிர்த்தாக முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன் வரதராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விபரிக்கையில் யாரிடம் கேட்டு என் வீட்டு மதிலில் ஒட்டுகின்றீர்கள் என்று நான் கேட்டதற்கு அவர்கள் யாரிடம் கேட்க வேண்டும் என்று மிரட்டல் தொனியுடன் மிரட்டினர். சுவரொட்டிகளையும் அதிகாரத்துடனும் மிரட்டல் பாணியுடனும் மீண்டும் 
முயற்சித்தனர். இருப்பினும் அதற்கு நான் அனுமதி வழங்காதன் காரணமாக அது பெரும் வாய்தர்க்கமாக மாற அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டாமல் சென்று விட்டனர்.
ஆனால் இன் காலை எனது வீட்டு சுவர் முழுவதும் மட்டும் இன்றி வீட்டு கேற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்பட்டது.

நான் அவர்களுக்கு மரியாதையாகத்தான் கூறினேன் சுவரொட்டிகளை எனது வீட்டு மதிலில் ஒட்ட வேண்டாம் என்று ஆனால் அவர்கள் நாம் என் ஆதிகார வெறியுடன் செய்து காட்டுவோம் என்ற மிரட்டல் பாணியுடன் யாரும் இல்லாத பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.


தேர்தல்காலம் என்றால் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள் தான் ஆனால் ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற வகையில் உரிமையுடன் எனது வீட்டு மதிலில் ஒட்ட வேண்டாம் என்று மரியாதையாக சொன்னபோதும் யாரிடம் கேட்கவேண்டும் ஒட்டுவதற்கு என்று மிரட்டிவிட்டு சென்று விட்டு பின்னர் பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டியது அவர்களின் அதிகார வெறியினை வெளிப்படுத்தி நிற்கின்றது. அத்துடன் முன்னர் நடைபெற்ற ஏதேட்சைத்தனமான அதிகார வெறியுடனான கொடுங்கோல் ஆட்சிமுறையினையே நாம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொண்டு வருவோம் என்ற செய்தியையா இவர்கள் இச் செயல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.