தேரர்கள் உள்ளிட்டோரை மன்றில் நிறுத்துங்கள்; சீறினார் சம்பந்தன் - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, October 8, 2019

தேரர்கள் உள்ளிட்டோரை மன்றில் நிறுத்துங்கள்; சீறினார் சம்பந்தன்
முல்லைத்தீவு - நீராவியடியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் இன்று (08) சற்றுமுன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

மேலும்,

நீதிமன்ற உத்தரவை மீறியோரை பார்த்து, அதனை அனுமதித்த பாதுகாப்பு தரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கோவில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது.

இதில் குற்றம் இழைத்தவர்கள், பொலிஸார் மற்றும் நீதிமன்ற கட்டளையை மீறியவர்களை அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் - என்றார்