கோத்தாவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி
சர்வதேசமே கோத்தாவை கைது செய் என்ற கோசங்களுடன் கோத்தாவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டனப் போராட்டம்
28/10 /2019 திங்கள்க்கிழமை காலை 10-30 மணிக்கு
இடம் யாழ் கிட்டு பூங்கா
இராணுவத்தினராலும், துணை இராணுவக் குழுவினராலும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது.
உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம்.
காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்.
சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
-கலப்பு பொறி முறை வெறும் கண் துடைப்பு
மேற்கூறிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு இப்போராட்டம் நடைபெறும்
என்பதினை அன்பு உரிமையோடு அறியத்தருகின்றோம்
மக்கள் எழுச்சி கொள்ளட்டும்
சர்வதேசத்தின் கண் திறக்கட்டும்
நன்றி;
ஒழுங்குகள் வட,கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்