புதிய ரிக் இயந்திரத்தின் வேகம், சுஜித் குழந்தை பத்திரமாக மீட்கப்படுமென தமிழக துணை முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் நம்பிக்கை வெளிஜிட்டுள்ளார்.
மேட்ப்புப் பணியை நேரில் சென்று பார்வையிட்ட அவர் உடகவியாளர்களுக்கு பதிலளிக்கையில்;
இறுதி கட்ட தகவலின்படி குழந்தை சுஜித் தற்போது 87 அடி ஆழத்தில் சிக்கி தங்கியுள்ளதாக மீட்பு குழு வல்ல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
2வது ரிக் இயந்திரத்தில் ட்ரில் கருவி 35 அடி ஆழத்தில் இருந்து குழி தோண்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
முதல் கொண்டுவந்த ரிக் இயந்திரத்தில் இருந்து 3 மடங்கு திறன் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. எனவே 35 அடி ஆழத்திற்கு கீழே மண் மட்டும் இருந்தால் இரவுக்குள் பணி முடிய வாய்ப்பு இருப்பதாகவும், 35 அடி ஆழத்திற்கு கீழே பாறை இருந்தால் காலையிலும் பணி தொடர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சியின் மூலம் சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்கபடுவான் என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.