வவுனியாவில் முன்னாள் போராளி மரணம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, October 28, 2019

வவுனியாவில் முன்னாள் போராளி மரணம்!


வவுனியாவில் தீபாவளி தினமான இன்று முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் சாவடைந்துள்ளார்.


பறண்நட்டகல் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் இன்றையதினம் (27) அதிகாலை 12 மணியளவில் தனது மனைவியுடன் உரையாடிவிட்டு உறங்குவதற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் உறங்கிய சில நிமிடங்களில் அவரிடம் மாற்றம் ஒன்றை உணர்ந்த மனைவி அவரை வந்து எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்கவில்லை.

இந்நிலையில் அயலவர்களை அழைத்துள்ளதுடன், பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கபட்டது.

புனர்வாழ்வு பெற்று விடுவிக்கபட்ட முன்னாள் போராளியான பேரின்பநாதன் (35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சாவடைந்துள்ளார்.

இவர் சில நோய்களிற்காக மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்