ஆற்றில் மிதக்கும் பெண்ணின் சடலம் -காணாமல் போன ஆசிரியையா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 8, 2019

ஆற்றில் மிதக்கும் பெண்ணின் சடலம் -காணாமல் போன ஆசிரியையா?ஹட்டன் ஸ்ரீபாத வித்யாலயத்தின் 27 வயதான பட்டதாரி ஆங்கில ஆசிரியையானசண்திம நிசன்சலா ரத்நாயக்க காணாமல் போய் ஒரு வாரமாகியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

கடந்த 1ம் திகதி மாலை 4 மணியளவில் வீட்டுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராவில் அவரது வீடு திரும்பும் காட்சி பதிவாகியிருந்தது. எனினும், சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள வீட்டை அவர் சென்றடைந்திருக்கவில்லை.

இது தொடர்பாக, ஆசிரியையின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து பொலிசார் பல்வேறு கோணங்களிலும் புலன்விசாரணைணை முடுக்கி விட்டும், எந்த தடயமும் கிட்டவில்லை.

இதேவேளை காணாமல் போன குறித்த ஆசிரியை, கம்பொல் பொலிஸ் நிலைய பதில் அதிகாரியொருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கண்டியில் இருந்து வத்தேகம நோக்கி செல்லும் மகாவலி ஆற்றில் இளம் பெண்ணொருவரின் உடல் மிதப்பதாக அப் பகுதி மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நட்டரம்பத வெவெல்லவில் உள்ள போல்கொல்ல நீர்த்தேக்கத்தில் மிதப்பதாக கம்பொல பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் சிதிலமாகியுள்ளதால் , அடையாளம் காண முடியவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிசார் குறித்த சடலம் ஆசிரியையினுடையதா என்பதை உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது