எதிர்வரும் சிறிலாங்கா ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பொது நிலைப்பாடொன்றுக்கு வரச் செய்வதற்கான முயற்சியில்ஈடுபட்டிருக்கும் வடக்கு – கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும், 6 தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நான்காவது சந்திப்பு சற்று முன்னர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு அண்மையாகவுள்ள “ப்ரைட் இன்” விடுதியில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.
இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்
புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்ந்தன் , வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ. கஜேந்திரகுமார் , செயலாளர் செ.கஜேந்திரன் , சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் ஆகியோரும்,
ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ,
ஈ.பீ.ஆர்.எல்.எவ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அதன் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோரும்,
தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க. அருந்தவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இன்றைய சந்திப்பில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். சின்மய மிஷன் வதிவிட சுவாமிகள், கிருஸ்தவ மதகுரு மற்றும், யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ். கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் எஸ். ஜோதிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.