ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை உயிருடன் வைத்திருக்க என்னென்ன வழிகள் உள்ளது என மருத்துவர் ஹர்ஷிதா கூறியுள்ளார்.
திருச்சியில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள நிலையில் அவனை காப்பாற்ற மீட்பு குழுவினர் 17 மணி நேரமாக போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் சுர்ஜித்தை உயிருடன் வைத்திருக்க செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து பிரபல குழந்தைகள் நல மருத்துவர் ஹர்ஷிதா பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், குழந்தைக்கு மிகவும் பழக்கப்பட்ட குரல், அதாவது தாய், தந்தை போன்றவர்கள் மைக் வழியாக குழந்தையுடன் பேசி கொண்டே இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
சுர்ஜித்தை உணர்வு நிலையில் வைத்திருந்தால் தான் அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
குழந்தைக்கு எந்த விதத்திலும் ஆக்சிஜன் குறையாதவாறு ஆக்சிஜை தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் செலுத்த வேண்டும்.
அதே போல பீடிங் போத்தல் அல்லது வேறு உபரகரணம் வழியாக குளுகோஸ் கொடுத்து கொண்டிருந்தால் சுர்ஜித்துக்கு தேவையான எனர்ஜி கிடைத்து கொண்டே இருக்கும்.
ஏனெனில் இரத்தத்தில் குளுகோஸ் குறைந்தால் கூட குழந்தை மயக்கமடைய நேரிடலாம் என கூறியுள்ளார்.