ஆழ்துளை கிணற்றில் 70 அடி ஆழத்தில் சிக்கி இருக்கும் குழந்தை சுர்ஜித்தை ஒன்றரை மணி நேரத்தில் மீட்க முடியும் என தேசிய மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டிப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது ஆண் குழந்தை சுர்ஜித் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்தான்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 20 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கிறது
சம்பவ இடத்துக்கு மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்துள்ள நிலையில் குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சுர்ஜித்தை மீட்பது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அவனை ஒன்றரை மணி நேரத்தில் மீட்க முடியும் என நம்புவதாக தேசிய மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி சற்று தமிழக மக்களை நிம்மதியடைய செய்துள்ளது.