ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரால் கொண்டுசெல்லப்பட்ட தனியான அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தில் இருந்த கதிரைகள் உட்பட அனைத்து தளபாடங்களும் அகற்றப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி இடம்பெற உள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னும் சொற்ப நாட்களே குறித்த இல்லத்தில் இருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.