கனடா பொது தேர்தலில் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.
கனடாவில் பொதுத் தேர்தல் திங்கட்கிழமை நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்கு முடிவுகளின்படி லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாகவும்,
பிற இடங்களில் சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் வெற்றி பெற்றாலும் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை எனவே சுயட்சிகள் மற்றும் சிறு கட்சிகளுடன் இணைந்து லிபரல் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் கனடா பிரதமராக பதவி ஏற்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.
இந்த நிலையில் தேர்தலில் அடைந்த வெற்றி குறித்து ஜஸ்டின் ட்ரூட்டோ கனடா மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் மாண்ட்ரில் நகரில் பேசும்போது, “ நீங்கள் செய்து வீட்டீர்கள் நண்பர்களே. வாழ்த்துகள். நாட்டை சரியான திசையில் நகர்த்துவதற்கு எங்கள் மீது நம்பிக்கை வைத்தற்கு நன்றி” என தெரிவித்தார்.
ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.