வறுமைகாரணமாக 40,000 ரூபாவிற்கு பிறந்த குழந்தையொன்று விற்பனை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது
கம்பளைவைத்தியசாலையில் பிறந்த குழந்தையொன்றை விற்பனைசெய்த தாய் உள்ளிட்ட மூவரைவிளக்கமறியலில் வைக்க கம்பளைநீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்பளைவைத்தியசாலையில் கடந்த செப்ரெம்பர் 11ம்திகதி பிறந்த குழந்தையொன்று, பிறந்துஐந்து நாட்களிற்குள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வறுமைகாரணமாக 40,000 ரூபாவிற்கு தரகர் ஒருவர் மூலம் கண்டியிலுள்ளகுழந்தைகள் இல்லாத தம்பதியொன்றிற்கு குறித்த குழந்தைவிற்பனை செய்யப்பட்டுள்ளது.
குழந்தையைவிற்ற பெண்மணிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள்உள்ளனர்.
இந்தநிலையில்குழந்தை விற்கப்பட்டமை தொடர்பில் கண்டி குழந்தைகள்மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகளிற்குகிடைத்த தகவலின் அடிப்படையில், குழந்தையைவாங்கியவர்களின் வீட்டிற்கு சென்று அவர்கள் விசாரணை செய்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தையின்தாய், தரகர், வளர்ப்புத்தாய் ஆகியோர்கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்.
அத்துடன்குழந்தையை கண்டி டிக்கிரி குழந்தைகள் இல்லத்தில் வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதிபதிஸ்ரீனித் விஜேசேகர உத்தரவிட்டடுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.