தொடர் குண்டுத் தாக்குதலுக்கு ஒரு சமூகத்தை குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது: ஹிஸ்புல்லா - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, October 13, 2019

தொடர் குண்டுத் தாக்குதலுக்கு ஒரு சமூகத்தை குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது: ஹிஸ்புல்லா

ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஒரு சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஏறாவூரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாக்கக் கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமெனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மக்களும் உரியவரை தேர்ந்தெடுத்து அவருக்கே தங்களின் வாக்குகளை வழங்க  வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.