அவதானம்; சமூக ஊடகங்கள் ஊடாக பணம் பறிக்கும் கும்பல்: பொலிசார் எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, October 13, 2019

அவதானம்; சமூக ஊடகங்கள் ஊடாக பணம் பறிக்கும் கும்பல்: பொலிசார் எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடும் திட்டமிட்ட வர்தகர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை அணுகி நம்பிக்கையை வளர்த்து அதன் பின்னரே அவ்வாறானவர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் அதிஸ்ட இலாப சீட்டு குலுக்கலின் மூலம் பணம் கிடைத்துள்ளதாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களுடாக பணம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்து இந்த மோசடி இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மிக பெறுமதியான சொத்து அல்லது பணத்தை சுங்க பிரிவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவற்றை பெறுவதற்கு ஆரம்ப கட்டணமாக ஒரு தொகை பணத்தை அறவிடுவதாகவும் ஆகவே குறித்த பணத்தை தமது வங்கி கணக்கில் வைப்பிடுமாறும் கேட்டு இந்த மோசடி இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறித்த மோசடிகாரர்கள் கடந்த மாதம் 5 ஆம் திகதி நிட்டம்புவ பகுதியை சேர்ந்த ஒருவருடன் முகப்புத்தகத்தில் அறிமுகமாகி விமான நிலையத்தில் இருந்து பொருட்கள் சிலவற்றை விடுவிக்க இரண்டு இலட்சத்து எழுதாயிரம் ரூபா பணம் தேவை என கூறி அவரிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் பொறுப்பான நிறுவனம் என உறுதிப்படுத்திகொண்டதன் பின்னர் அவர்களுடன் பணம் அல்லது வேறு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மக்களை கேட்டுள்ளார்.