மகிந்த தரப்பின் யாழ்.வருகையினையடுத்து யாழ்.நகரில் பாதுகாப்பு கெடுபிடிகள் உச்சமடைந்துள்ளன.
யாழ்.நகரின் நுழைவாயில் முதல் அனைத்து இடங்களிலும் அவ்வாறு பாதுகாப்பு கெடுபிடிகள் படையினரால் சோதனை என்ற பேரில் முன்னெடுக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக, தமிழ்மக்களின் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய பொது ஆவணத்தில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் இன்று (28) சந்தித்துப் பேசவுள்ளன.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் முற்பகல் நடக்கும் இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
“யாழ்ப்பாணத்தில் இன்று நடக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்” என, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.