கருணாவின் மிக முக்கியஸ்தர் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் சிக்கினார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 22, 2019

கருணாவின் மிக முக்கியஸ்தர் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் சிக்கினார்

மன்னாரில் உத்தரவை மீறிச் சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட கருணாவின் வலது கரமாக செயற்படும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.

மன்னார், இலுப்பைக்கடவை வீதியில் அமைந்துள்ள கடற்படையினரின் வீதி சோதனை சாவடியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

குறித்த இடத்தில் கடமையில் இருந்த கடற்படை அதிகாரிகள், சொகுசு வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போதிலும் உத்தரவை மீறி வாகனம் வேகமாக பயணித்துள்ளது.

இதனால் அந்த வாகனத்தின் டயர்களுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

உத்தரவை மீறிச் சென்ற சொகுசு ஜீப் வண்டியில் கேரளா கஞ்சா 164.3 கிலோ கிராம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி குறித்த சந்தர்ப்பத்தில் சீருடையில் இருந்ததாகவும், அவர் வாகனத்தின் முன் பகுதியில் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் இனியபாரதி என்ற பெயரோடு பல கொலைகளை செய்வித்த ஒருவன் திரும்பவும் கோடபாயவிற்காக களத்தில் இறங்கி உள்ளார்.

இவர் கடந்த வெள்ளியன்று 35 Kg கேரள கஞ்சாவுடன் பிடிபட்ட இனியபாரதி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.