ஈஸ்டர் தாக்குதல் குறித்து தயான் ஜயதிலக்கவின் முகப்புத்தக பதிவு!
பிரபல அரசியல் விமர்சகரான பேராசிரியர் தயான் ஜயதிலக்க தனது முகப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் குறித்த விடயம் விமர்சத்துக்குரிய பதிவாகியுள்ளது.
மகிந்தவாதியான தயான் ஜயதிலக்க ஈஸ்ட்டர் தாக்குதலுக்கு பின்னாலும் அதன் பின் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாகவும் கோத்தபாய இருந்ததாக தெரிவித்துள்ளது பலரை சிந்திக்க வைத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் கொழும்பு ஊடகம் மூலம் இனவாதத்தை உருவாக்க பரந்த முயற்சியொன்று நடந்ததாக அவர் மேலும் தெளிவுறுத்தியுள்ளார்.
நாளைய தினம் ஈஸ்ட்டர் தாக்குதல் குறித்த பாராளுமன்ற தேர்வு குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ள நேரத்தில் மகிந்தவாதி என பலராலும் கருதப்படும் தயான் ஜயதிலக்க பதிவிட்டுள்ள முகப்புத்தக பதிவு பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
அரசியல் ரீதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக நாளை இருக்கும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்