சஜித்தால் அழியப் போகும் தமிழினம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 15, 2019

சஜித்தால் அழியப் போகும் தமிழினம்!

சிறிலங்காவின் சனாதிபதி வேட்பாளரும்  தமிழர்களின் மீதான கட்டமைப்பு சார் இனவழிப்பின் முக்கிய பங்காளியுமான சஜித்பிரேமதாசாவால் தமிழ்மக்களுக்கும் தமிழீழ தேசத்திற்கும் பேராபத்தொன்று வரவிருக்கிறது.
குறிப்பாக கட்டமைப்பு சார் இனவழிப்பின் இலக்குகளான காணிஅபகரிப்பு பொளத்தமயமாக்கல் தொல்பொருட் திணைக்களத்தின் பேரில் தமிழரின் அடையாளங்களை அழித்தல் போன்ற செயற்பாடுகள் சஜித் பிரேமதாசா கலாச்சார அமைச்சராக பொறுப்பேற்ற பின்பே மிக உக்கிரமாக தமிழீழ தேசமெங்கும் நடைபெற்றது.
குறிப்பாக
  •  முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் புத்த பிக்குகளின் அத்து மீறிய செயற்பாடுகள்
  • திருகோணமணை காணி அபகரிப்பு
  • மன்னாரில் 72 ஆயிரம் ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பு
  • வெடுக்குநாறி மலையைத் தொல்லியல் திணைக்களம் உரிமை கோரியமை.
என அனைத்தும் சஜித்பிரேமதாசாவின் அனுமதியுடன் அவரின் அமைச்சின் கீழேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி சஜித் பிரேமதாசா பதவிக்கு வந்த பின்னர் சரத்பொன்சேகாவை இாரணுவத்தளபதியாக நியமிப்பேன் என கூறியிருப்பது தமிழ் மக்களின் இருப்பை மேலும் கேள்விக்குறியாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தபாய எவ்வளவு பயங்கரமான இனப்படுகொலையாளியோ அதே அளவுக்கு சற்றும் குறைவில்லாமல் தமிழினம் மீதான கட்டமைப்பு சார் இனவழிப்பை சஜித்பிரேமதாச கொண்டு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக சிறிலாங்கா சனாதிபதி தேர்தல் என்பது தமிழ்மக்கள் தங்களுக்கு தாங்களே தூக்குகையிற்றை போடுவதாகவே அமையும் ஆகவே எமக்கான நீதியை சர்வதேசத்திடம் இருந்து மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்கின்ற சாத்தியப்பாட்டுடன் தமிழ்மக்கள் தங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும்.