2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போாில் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் புனா்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனா்.
இந்நிலையில் சரணடைந்தவா்களை காணவில்லை என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ஸ கூறியுள்ளாா்.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார். “2015 ஆம் ஆண்டு ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறிய இலங்கை தொடர்பான தீர்மானத்தை எனது அரசு அங்கீகரிக்காது.
என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். வெள்ளை வான் கலாசாரம் என்னுடையதில்லை. ஆட்சி மாற்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம். இராணுவத்திற்கு நான் தலைமைதாங்கவில்லை
என்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.