இக்கூட்டத்தை பார்க்கும் போது நவம்பர் 17ம் திகதி சஜித் ஜனாதிபதியாக இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்தார்.
இன்று (10) காலிமுகத்திடலில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும்,
மஹிந்தவின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பெண்களை பலாத்காரம் செய்ததை இந்நாட்டு மக்கள் மறக்கவில்லை. அவர் சொல்வதை கேட்காததால் சிராணியை வீட்டிற்கு அனுப்பினர். இதனை இந்நாட்டு பெண்கள் மறக்கவில்லை. - என்றார்.