கோத்தாவை மிரள வைக்கும் மக்கள் படை சஜித்துடன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 11, 2019

கோத்தாவை மிரள வைக்கும் மக்கள் படை சஜித்துடன்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று (10) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பெருந் தொகை மக்கள் அலைகடலென திரணட்டிருந்தனர்.

சுமார் 5 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அருகில் உள்ள வீதிகள் மூடப்பட்டு இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பல கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

கோத்ததாபய ராஜபக்சவின் முதலாவது பிரச்சார கூட்டம் நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்றது. கோத்தாபயவின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் சஜித்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் பாரியளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சஜித்திற்கான மக்கள் ஆதரவை கண்டு கோத்தபாய அணி கலக்கம் அடைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.