சரணைடைந்த எங்கள் சிறுவர்கள் எங்கே?: சிறுவர் தினத்தில் யாழில் போராட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 1, 2019

சரணைடைந்த எங்கள் சிறுவர்கள் எங்கே?: சிறுவர் தினத்தில் யாழில் போராட்டம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் கல்வியாங்காடு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணியாக காணாமல்போனோருக்கான அலுவலகம் வரை செல்லவுள்ளனர்.

அங்கு மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பொது அமைப்புக்கள். பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது நூற்றுக்கனக்கான சிறுவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தும் கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டனர்.

எனினும் அச்சிறுவர்கள் இதுவரையில் மீளக் கையளிக்கப்படவில்லை. இதனால் சரணடைந்த சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாத நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டுமென உறவினர்கள் கோரி வருகின்றனர்.

இதற்கமைய சிறுவர் தினத்தை முன்னிட்டு தமது பிள்ளைகளான சிறுவர்கள் விடயத்தில் அரசாங்கம் பதில் கூற வேண்டுமென வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.